பாஸ் கட்சிக்கு வாய்ப்பு கொடுங்கள்! பெர்சாத்து உச்சமன்ற உறுப்பினர் வேண்டுகோள்
- Shan Siva
- 14 Jan, 2026
கோலாலம்பூர், ஜன
14: பெரிகாத்தான்
நேஷனல் (PN) தலைவர் பதவியில்
இருந்து டான்ஸ்ரீ முகைதீன்
யாசின் விலகியதைத்
தொடர்ந்து, எதிர்க்கட்சி
கூட்டணியான PN-ஐ பாஸ் (PAS) கட்சி வழிநடத்துவதற்காக அனைத்து தரப்பினரும் இடமளிக்க
வேண்டும் என்று பெர்சாத்து (Bersatu) கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் ரஸாலி இட்ரிஸ்
கேட்டுக்கொண்டுள்ளார். PN-ஐ வழிநடத்துவதில் பெர்சாத்துவுக்கு பாஸ் எப்போதும்
முழுமையான ஆதரவை வழங்கி வந்துள்ளதால், இப்போது பாஸ் கட்சிக்கு ஆதரவு வழங்குவது அவசியம் என அவர்
தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட
முறையில், அடுத்த பொதுத்
தேர்தலில் PN-ஐ வழிநடத்த பாஸ்
கட்சிக்கு இடமளிக்கும் வகையில், PN தலைவர் பதவியும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் பாஸ் கட்சியே ஏற்க வேண்டும் என்று தாம் பரிந்துரைப்பதாக அவர் FMT-க்கு
தெரிவித்தார்.
PN துணை பொதுச்
செயலாளர் தக்கியுதீன் ஹாசன், முகைதீன் ராஜினாமா தொடர்பாக அவசர PN உச்சக் குழுக் கூட்டத்தை கூட்ட அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரெங்கானு
பெர்சாத்து தலைவர் ஆகிய ரஸாலி, PN-ஐ இணைந்து நிறுவிய கட்சிகளாகிய பாஸ்
மற்றும் பெர்சாத்து இடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும்
கூறினார்.
இரு
கட்சிகளுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை
அவர் நிராகரித்தார். PN-இல் இரு
கட்சிகளும் தொடர்ந்து நெருக்கமாக செயல்பட்டு வருவதாகவும், மூத்த தலைவர்கள் இடையே நல்லுறவு
நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், PN-இன் சில உறுப்புக் கட்சி தலைவர்கள் சமூக
ஊடகங்களில் வெளியிட்ட கருத்துகள் எதிர்மறை பார்வையை உருவாக்கியதாகவும், அதை அரசியல் எதிரிகள் பயன்படுத்திக்
கொண்டதாகவும் அவர் கூறினார்.
சமூக ஊடகங்களில்
நடைபெறும் அனைத்து குற்றச்சாட்டுகளும், வாக்குவாதங்களும் நிறுத்தப்பட வேண்டும். முடிவெடுப்பதை PN உச்சத் தலைமையிடம் விட்டுவிடுவோம். PN உச்சக் குழு எடுக்கும் எந்த முடிவையும் ஏற்போம்
என அவர் தெரிவித்துள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



