காணாமல் போன இரு பெண்கள் விவகாரம்! ஐவர் கைது

top-news
FREE WEBSITE AD

கோத்தா பாரு, ஜூன் 22: மாச்சாங்கில்  நேற்று முன் தினம் நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையில் மீட்கப்பட்ட, 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு பெண்கள் காணாமல் போனதில் தொடர்புடையதாகக் கூறப்படும், 10 முதல் 20 வயதுக்குட்பட்ட ஐந்து இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது.


ஐந்து சந்தேக நபர்களும் நேற்று முன் தினம் மதியம் கைது செய்யப்பட்டதாக மாச்சாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் அசுஹர் முகமது நூர் கூறினார்.


விசாரணைக்கு வசதியாக, முக்கிய சந்தேக நபர்கள் இருவர் ஐந்து நாட்களுக்கும், மீதமுள்ள மூவர் இரண்டு நாட்களுக்கும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


வியாழக்கிழமை காணாமல் போன இரண்டு சிறுமிகளையும் காவல்துறை மீட்டனர்.

காயமடைந்த இருவரும் மருத்துவப் பரிசோதனைக்காக கோலா கிராயில் உள்ள சுல்தான் இஸ்மாயில் பெட்ரா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோத்தா பாருவுக்கு முதன்முறையாகத் தனியாகப் பயணம் செய்த அந்த இருவரும்  காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது! 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *