வெளிநாட்டவர்களைக் குறிவைக்கும் குடிநுழைவு துறையின் கடுமையான நடவடிக்கைகள்
- Tamil Malar (Reporter)
- 14 Jan, 2026
புத்ராஜெயா, ஜன.14-
வெளிநாட்டினர் அதிகம் கூடும் பகுதிகளைக் குறிவைத்து, குடிநுழைவு துறை தனது அமலாக்க நடவடிக்கைகள், செயல்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தும் என்று அதன் தலைமை இயக்குநர் டத்தோ ஸகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் மேற்கொள்ளப்படும் அமலாக்க நடவடிக்கைகள் முந்தைய காலங்களை விட அதிகமாக திட்டமிடப்பட்டும், செயல்திட்ட ரீதியாகவும் இருக்க வேண்டும் என்றார். இனி தொழிற்சாலைகள் அல்லது குறிப்பிட்ட கட்டுமானத் தளங்களிலேயே நடவடிக்கைகள் சுருக்கப்படாமல், பிற துறைகள், பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“இந்த ஆண்டில் அமலாக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. பல பகுதிகளில் வெளிநாட்டவர்கள் பொருளாதார செயல்பாடுகளை ஆதிக்கம் செலுத்துவதுடன், ஒரே இடத்தில் அதிகமாகக் கூடுகின்றனர்,” என்று அவர் தெரிவித்தார்.
எனவே, கட்டுமானத் தளங்கள் போன்ற வழக்கமான இடங்களைத் தாண்டி, மக்களுக்கு அதிக கவலை ஏற்படுத்தும் துறைகள், பகுதிகளை அடையாளம் கண்டு அங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
இந்த அணுகுமுறை, நாட்டின் சட்ட ஒழுங்கை உறுதிப்படுத்துவதோடு, மக்களின் நம்பிக்கையையும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



