தேசிய ஒற்றுமைக்குப் பாதிப்பு ஏற்பட கூடாது! ஒருமைப்பாட்டு அமைச்சர் வலியுறுத்து!
- Sangeetha K Loganathan
- 07 Feb, 2025
பிப்ரவரி 7,
இஸ்லாமிய மேம்பாட்டு ஆணையமான JAKIM முன்மொழிந்துள்ள இஸ்லாமியர்களுக்கானச் சிறப்புக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தும் முன்னர் நாட்டின் பல்லினத்துவத்திற்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் இருத்தல் கூடாது என ஒருமைப்பாட்டு அமைச்சர் Datuk Aaron Ago Dagang வலியுறுத்தினார்.
நாட்டின் இஸ்லாமியர்களுக்கானக் கட்டுப்பாட்டைப் பேணுவதில் JAKIM நம்பிக்கை கொண்டிருந்தாலும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து ஆழமாக விவாதிக்கப்பட்டதாகவும் JAKIM மற்ற மதப் பிரதிநிதிகளையும் ஒருங்கிணைத்து ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இஸ்லாம் அல்லாதவர்களின் பண்டிகைகள் கொண்டாட்டங்கள் வழிபாடுகள் இறுதிச் சடங்குகள் ஆகியவற்றில் இஸ்லாமியர்களின் பங்களிப்பைப் புறக்கணிக்கும்படியாக JAKIM நடந்துக்கொள்ளாது என தாம் நம்புவதாகவும் Datuk Aaron Ago Dagang தெரிவித்தார்.
Menteri Perpaduan Datuk Aaron Ago Dagang menegaskan bahawa sebarang peraturan baharu oleh JAKIM untuk umat Islam tidak boleh menjejaskan keharmonian kaum. Beliau menggesa JAKIM untuk berbincang dengan wakil agama lain sebelum melaksanakan garis panduan tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



