BUMIPUTERA குத்தகையாளருக்கான RM4.79 பில்லியன் ஊழல்! பெர்சத்து MP மீது 18 பணமோசடி வழக்குகள்!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 13, 

கோவிட் காலத்தின் போது பொருளாதாரத்தைச் சீர்படுத்தும் திட்டத்தின் கீழ் BUMIPUTERA குத்தகையாளர்களுக்காக Jana Wibawa திட்டம் 2020 ஏப்ரல் மாதத்தில் முகைதீன் தலைமையிலான அரசு அறிமுகப்படுத்தப்பட்டு RM12.25 பில்லியன் நிதியைச் சிறப்பு ஒதுக்கீடாக வழங்கியதில் RM4.79 பில்லியன் நிதிக்கானக் கணக்குகள் இல்லாதது கண்டுப்பிடிக்கப்பட்டது.

Jana Wibawa திட்டத்தை வழிநடத்தும் பொறுப்பு அப்போதைய பெர்சத்து தகவல் தொடர் தலைவரான Datuk Wan Saiful Wan Jan வழங்கப்பட்ட நிலையில் குத்தகையாளர்களிடமிருந்து லஞ்சம் பெற்றதாகவும் தனது நிறுவனங்களும் நெருக்கமான நிறுவனங்களுக்கும் நிதியைப் பெறும் வழிகளைச் சுலபமாக்கியதாகவும் ஆதாரத்துடன் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பான விளக்கத்தை அளிக்க தனக்கு அவகாசம் வேண்டும் என TASEK GELUGOR நாடாளுமன்ற உறுப்பினருமான Datuk Wan Saiful Wan Jan தெரிவித்தார்.

அதே நேரத்தில் ஏப்ரல் 2022 இல் உயர் ரக Ford Ranger வாகனத்தை வாங்குவதற்காகத் தமது சொந்த வங்கிக் கணக்கிற்கு RM5.59 மில்லியன் தொகை எங்கிருந்து வந்தது எனும் விளக்கத்தையும் TASEK GELUGOR நாடாளுமன்ற உறுப்பினருமான Datuk Wan Saiful Wan Jan வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *