விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட கசிவு வழக்கு: குற்றம்சாட்டப்பட்டவர் மனு – கோர்ட்டு கடும் உத்தரவு

top-news
FREE WEBSITE AD

நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பே இணையத்தில் கசிந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபர் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணைந்துள்ளார்.

இந்த வழக்கில் பிரதான குற்றவாளியாகக் கூறப்படும் பிரீலான்ஸ் எடிட்டர் ஒருவர், படத்தை சட்டவிரோதமாக நகலெடுத்து வெளியிட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் தாக்கல் செய்த மனுவுக்கு தயாரிப்பு நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு உடனடி தளர்வு வழங்க முடியாது எனக் கூறி, சம்பந்தப்பட்டவர்களின் செயல்பாடுகள் குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மேலும், கசிந்த படத்தை சமூக ஊடகங்கள் மற்றும் இணைய தளங்களில் பகிர்வதை முற்றிலும் தடைசெய்யும் இடைக்கால உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கசிவு சம்பவம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி, சில நிமிட காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து முழுப் படம் இணையத்தில் பரவியதாகக் கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இவ்வழக்கில் இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, படத்தை பென் டிரைவில் நகலெடுத்து மற்றவர்களுக்கு பகிர்ந்ததாக போலீசார் கண்டறிந்துள்ளனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *