வெற்று வாக்குறுதிகளை நம்ப வேண்டாம்; ஜொகூர் இளைஞர்களுக்கு ஒன் ஹபீஸ் அறிவுரை
- Surendran Sumdraraj
- 02 Jul, 2026
கூலாய், ஜூலை 2 –
ஜோகூர் மாநில வாக்காளர்கள், குறிப்பாக இளைஞர்கள், நிறைவேற்ற முடியாத வெற்று வாக்குறுதிகள் மற்றும் ஆளும் அரசுக்கு எதிராக பரப்பப்படும் தவறான பிரசாரங்களை நம்பி ஏமாறக்கூடாது என்று ஜொகூர் முதலமைச்சரும், பாரிசான் நேஷனல் (BN) ஜோகூர் தலைவருமான டத்தோ ஒன் ஹபீஸ் காசி தெரிவித்துள்ளார்.
கடந்த கால அனுபவங்களில் இருந்து மக்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், தேர்தல் காலங்களில் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டாலும், அவற்றில் பல இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இதற்கு உதாரணமாக, சிம்பாங் ரெங்காம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மஸ்லி மாலிக், 2018 பொதுத் தேர்தலின்போது பல வாக்குறுதிகளை வழங்கியதாகவும், ஆனால் அவற்றை நிறைவேற்றவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
“2018 பொதுத் தேர்தலின்போது பல இனிமையான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. எனது தொகுதியான சிம்பாங் ரெங்காமில் இலவச சுங்கச்சாவடி வசதி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா?” என்று ஒன் ஹபீஸ் கேள்வி எழுப்பினார்.
மேலும், மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி செயல்படும் தலைமையையே வாக்காளர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றும், வெறும் தேர்தல் வாக்குறுதிகளை விட செயல்பாடுகளின் அடிப்படையில் அரசியல் கட்சிகளை மதிப்பிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



