உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை மீண்டும் இயக்கிய ஜப்பான்
- Surendran Sumdraraj
- 13 Jun, 2026
தோக்கியோ, ஜூன் 13 –
உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையமாகக் கருதப்படும் ஜப்பானின் காஷிவசாகி-கரிவா அணுமின் நிலையத்தின் ஒரு உலையை மீண்டும் இயக்கியிருப்பது, நாட்டில் அணுக்கழிவு சேமிப்பு வசதிகள் நிரம்பி வரும் அபாயம் குறித்த புதிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2011-ஆம் ஆண்டு புகுஷிமா அணு விபத்துக்குப் பிறகு நீண்டகாலமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த அணுமின் நிலையத்தை மீண்டும் இயக்கும் நடவடிக்கையை ஜப்பான் அரசு முன்னெடுத்து வருகிறது. ஆனால், பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருட்களைப் பாதுகாப்பாக நீண்டகாலம் சேமித்து வைப்பதற்கான நிரந்தரத் தீர்வு இன்னும் இல்லாதது பெரும் சவாலாக இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, ஜப்பானின் பல அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருள் சேமிப்புக் குளங்கள் ஏற்கனவே சராசரியாக 80 சதவீதத்திற்கும் அதிகமாக நிரம்பியுள்ளன. குறிப்பாக காஷிவசாகி-கரிவா உள்ளிட்ட சில நிலையங்களில் அடுத்த சில ஆண்டுகளுக்குள் சேமிப்புத் திறன் முழுமையாக நிரம்பும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



