தமிழ்ப்பள்ளியிலிருந்து ஜப்பான் செல்லும் மாணவர்கள்! – வழியனுப்பி வைக்கும் கல்வி அமைச்சு!
- THINAGAREN SANGGAREN
- 16 Nov, 2026
நவம்பர் 16,
ஜப்பானில் நடைபெற்றவிருக்கும் அனைத்துலக WORLD ROBOT GAMES போட்டியில் மலேசியாவிலிருந்து 67 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். நேற்று இரவு KLIA அனைத்துலக விமான நிலையத்திலிருந்து ஜப்பானுக்குப் புறப்பட்ட 67 மாணவர்களையும் கல்வி அமைச்சர் FADHLINA SIDEK-இன் சிறப்பு அதிகாரி THIYAGARAJ SANKARA NARAYANAN வழியனுப்பி வைத்து பாராட்டையும் தெரிவித்தார்.
பினாங்கிலிருந்து 45 மாணவர்களும் ஜொகூரிலிருந்து 12 மாணவர்களும் பேராக்கிலிருந்து 5 மாணவர்களும் சிலாங்கூரிலிருந்து 3 மாணவர்களும் கெடாவிலிருந்து 2 மாணவர்களும் என மொத்தம் 67 மாணவர்கள் மலேசியாவைப் பிரதிநிதித்து அனைத்துலக ரோபோட்டிக் போட்டியில் பங்கேற்பது நம் தமிழ்ப்பள்ளிக்கும் மலேசிய நாட்டுக்குமான பெருமை என THIYAGARAJ SANKARA NARAYANAN தெரிவித்தார்.
நேற்று ஜப்பான் புறப்பட்ட 67 மாணவர்களும் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று மீண்டும் நவம்பர் 22 இரவு 8 மணிக்கு KLIA முனையம் 1 வந்தடைவார்கள் என்றும் அவர்களின் வெற்றியை வரவேற்க நாம் அனைவரும் விமான நிலையத்தில் காத்திருப்போம் என்றும் கல்வி அமைச்சர் FADHLINA SIDEK-இன் சிறப்பு அதிகாரி THIYAGARAJ SANKARA NARAYANAN கேட்டுக்கொண்டார்.

Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

