குவாட் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் - இந்தியா வந்தார் ஜப்பான் வெளியுறவு அமைச்சர்
- Surendran Sumdraraj
- 26 May, 2026
புதுடெல்லி, மே 26-
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய “குவாட்” கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் வெளியுறவு மந்திரி Toshimitsu Motegi இந்தியா வந்துள்ளார். இந்த முக்கிய கூட்டம் இன்று புதுடெல்லியில் நடைபெறுகிறது.
இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்துள்ள மோடேகி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் S. Jaishankar மற்றும் பிரதமர் Narendra Modi ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த குவாட் மாநாட்டில் அமெரிக்க வெளியுறவு செயலாளர் Marco Rubio மற்றும் ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி Penny Wong ஆகியோரும் பங்கேற்கின்றனர். இந்தோ-பசிபிக் பிராந்திய பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, முக்கிய கனிம வள விநியோகச் சங்கிலி, செயற்கை நுண்ணறிவு மற்றும் பொருளாதார பாதுகாப்பு போன்ற அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



