பெரிக்காத்தானின் பொருளாளர் பதவி பாஸ் கட்சிக்கு மட்டுமே!

top-news

ஜனவரி 26,

பெரிக்காத்தானின் பொருளாளர் பதவியிலிருந்து DATO' SERI AHMAD SAMSURI விலகியதை அடுத்து பாஸ் கட்சி விரைவில் மற்றொரு பெருளாளரைத் தேர்வு செய்யும் என பாஸ் கட்சியின் உதவித் தலைவர் Datuk Mohd Amar Abdullah தெரிவித்தார். பெரிக்காத்தான் கூட்டணி கட்சிகள் பொருளாளர் பதவி குறித்து கருத்துகள் தெரிவிக்க விரும்பினால் பாஸ் கட்சியிடம் தெரிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 

பாஸ் கட்சியின் தலைவர் பெரிக்காத்தானுக்கானப் பொருளாளரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் அதுவரையில் பெரிக்காத்தானின் பொருளாளர் பதவி குறித்தான ஊகங்களைக் கூட்டணி கட்சிகள் பரப்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார். பெரிக்காத்தானின் பொருளாளர் பதவி பாஸ் கட்சியுடையது என்பதைக் கூட்டணி கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

PAS akan melantik Bendahari baharu untuk Perikatan Nasional (PN) selepas peletakan jawatan Dato' Seri Ahmad Samsuri. Naib Presiden PAS Datuk Mohd Amar Abdullah menegaskan jawatan Bendahari PN adalah hak eksklusif PAS dan meminta tiada spekulasi dibuat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *