மாற்றுத்திறனாளியான 16 வயது இளைஞன் நீரில் மூழ்கி பலி!

- Sangeetha K Loganathan
- 03 Mar, 2025
மார்ச் 3,
2 நாள்களாகக் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த 16 வயது மாற்றுத்திறனாளி இளைஞர் இன்று காலை 11.55 மணிக்கு Sungai Siam, Felda Kota Gelanggi 3 ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை முதல் அவரைத் தேடி வரும் மீட்புப் படையினர் Sungai Siam, Felda Kota Gelanggi 3 ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் காணாமல் போனதாக நம்பப்படும் 16 வயது Muhammad Amir Mursyid bin Shamli என அடையாளம் காணப்பட்டுள்ளதாக்த் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக் கிழமை நண்பகல் 1.30 மணியளவில் நண்பர்களுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது அவர் நீரில் மூழ்கியதாக நம்பப்படுகிறது. காப்பாற்ற முயற்சிக்காத உடன் இருந்த நண்பர்கள் மூவரும் அங்கிருந்து பயந்து ஓடியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக ஜெராண்டூட் மாவட்டக் காவல் ஆணையர் Zukri Muhammad தெரிவித்தார்.
Seorang remaja OKU Muhammad Amir Mursyid 16 ditemukan lemas di Sungai Siam, Jerantut selepas dilaporkan hilang sejak Jumaat. Mangsa dipercayai lemas ketika mandi bersama tiga rakan yang tidak berani membantu. Mayatnya ditemui terapung dan dihantar untuk bedah siasat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *