சரவாக்கில் மூடுபனி நிலை மோசமடைவு

top-news
FREE WEBSITE AD

கூச்சிங், ஆக. 11-

சரவாக்கில் நிலவும் புகைமூட்டம் மற்றும் காற்று மாசுபாடு மேலும் மோசமடைந்துள்ள நிலையில், இன்று காலை 6 மணி நிலவரப்படி 11 பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு (ஐபியூ) ஆரோக்கியமற்ற அளவை எட்டியுள்ளது.

சுற்றுச்சூழல் துறையின் (ஜேஏஎஸ்) காற்று மாசுக் குறியீட்டு நிர்வகிப்பு அமைப்பான ஏபிஐஎம்எஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, செரியான் பகுதியில் உள்ள காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையத்தில் மாசு அளவு குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது.

அங்கு காற்றுத் தரக் குறியீடு 189 ஆகப் பதிவாகியுள்ளது. இது மிகவும் ஆரோக்கியமற்ற நிலையை நெருங்கியுள்ளதால், அப்பகுதி மக்களிடையே கவலை அதிகரித்துள்ளது.

செரியான் தவிர, மேலும் 10 கண்காணிப்பு நிலையங்களிலும் காற்றுத் தரக் குறியீடு ‘ஆரோக்கியமற்ற’ பிரிவில் பதிவாகியுள்ளது.

காற்றில் புகை மற்றும் மாசுத் துகள்களின் அளவு அதிகரிப்பதால், குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *