மலேசியாவில் புகைமூட்டம் அடுத்த ஆண்டு தொடக்கம் வரை நீடிக்கலாம் – ஆர்தர் ஜோசப் குருப்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப். 22-

நாட்டில் நிலவும் புகைமூட்டப் பிரச்சினை, தொடர்ச்சியான வெப்பமான மற்றும் வறண்ட வானிலை, திறந்தவெளி எரிப்பு சம்பவங்கள் ஆகியவற்றால் அடுத்த ஆண்டு தொடக்கம் வரை நீடிக்கக்கூடும் என இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர்தர் ஜோசப் குருப் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் எல் நினோ நிகழ்வு நவம்பர் முதல் டிசம்பர் காலப்பகுதியில் ‘சூப்பர் எல் நினோ’ நிலையை எட்டக்கூடும் என்றும், அதன் தாக்கம் 2027-ஆம் ஆண்டின் தொடக்கப் பகுதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார். மலேசிய வானிலைத் துறையும் சூப்பர் எல் நினோ நவம்பர் மாதத்திலிருந்து தீவிரமடையலாம் என முன்னதாக எச்சரித்துள்ளது.

மேலும், தென்மேற்கு பருவமழைக் காலத்துடன் எல் நினோ விளைவுகள் இணைவதால், நாட்டில் மழைப்பொழிவு குறைந்து, அதிக வெப்பம் மற்றும் வறட்சி நிலை ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *