புகைமூட்டம்: குழந்தைகளின் உடல்நிலையை கருத்தில் கொண்டு பெற்றோர் முடிவு எடுக்கலாம் – வோங் கா வோ

top-news
FREE WEBSITE AD

மலாக்கா, செப். 8 –

நாட்டில் நிலவி வரும் புகைமூட்ட சூழ்நிலையைத் தொடர்ந்து, பெற்றோர் தங்களது குழந்தைகளின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு பள்ளிக்கு அனுப்புவது குறித்து பொறுப்புடன் முடிவு எடுக்க வேண்டும் என்று துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ தெரிவித்துள்ளார்.

காற்று மாசுபாடு குழந்தைகளின் உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற பெற்றோரின் கவலைகளைக் கல்வி அமைச்சு புரிந்துகொள்வதாக அவர் கூறினார்.

குறிப்பாக சுவாசப் பிரச்சினை அல்லது உடல்நலக் குறைவு உள்ள குழந்தைகள் தொடர்பாக, தேவையானால் அவர்களைத் தற்காலிகமாகப் பள்ளிக்கு அனுப்பாமல் இருக்க பெற்றோருக்குத் தளர்வு வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், அந்த முடிவு குழந்தைகளின் நலன், பாதுகாப்பு மற்றும் கல்வி தேவைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட வேண்டும் என்றும் வோங் கா வோ வலியுறுத்தினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *