பிஎன் கூட்டணியிலிருந்து பெர்சாத்துவின் உறுப்பினர் நிலை: அரசியல் அறநெறி அடிப்படையில் பார்க்க வேண்டும் - தக்கியுதீன் ஹாசான்
- Surendran Sumdraraj
- 10 Aug, 2026
கோத்தா பாரு, ஆக. 10-
பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) கூட்டணியில் பெர்சாத்துவின் உறுப்பினர் நிலை தொடர்பாக பாஸ் தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் வெளியிட்ட கருத்தை அரசியல் அறநெறியின் அடிப்படையில் பார்க்க வேண்டும் என பிஎன் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ தக்கியுதீன் ஹாசான் தெரிவித்தார்.
பாஸ் கட்சியின் 72ஆவது ஆண்டு பொதுப் பேரவைக் கூட்டத்துக்கான குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தை இரண்டு கோணங்களில் அணுக வேண்டும் என்றார்.
“ஒன்று அரசியல் அறநெறி, மற்றொன்று சட்டம் சார்ந்த கோணம். பெர்சாத்து பிஎன் கூட்டணிக்கு எதிராகப் போட்டியிடும் நிலையில், அந்தக் கட்சி தொடர்ந்து பிஎன் கூட்டணியில் இருக்க விரும்புகிறதா என்ற கேள்வி எழுகிறது.
“அரசியல் அறநெறியின் அடிப்படையில் பார்க்கும்போது, அவர்கள் இனி பிஎன் கூட்டணியில் இருக்க விரும்பவில்லை என்றே தோன்றுகிறது,” என்று அவர் கூறினார்.
பெர்சாத்து பிஎன் கூட்டணிக்கு எதிராகப் போட்டியிடும் சூழ்நிலையில், தொடர்ந்து கூட்டணியில் இணைந்து செயல்படுவது குறித்து கேள்வி எழுப்பிய தக்கியுதீன், “இதற்குப் பிறகும் அவர்கள் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



