காட்டுக்குள் மறைந்திருந்த 65 வெளிநாட்டினர்கள் கைது!
- THINAGAREN SANGGAREN
- 26 Oct, 2026
அக்தோபர் 26,
Janda Baik காட்டுப்பகுதிக்குள் தலைமறைவாகத் தங்கியிருந்த 65 வெளிநாட்டினர்களைத் தேசியக் குடிநுழைவுத் துறை கைது செய்துள்ளது. தோட்டத்தொழிலில் ஈடுபட்டு வந்த 278 வெளிநாட்டினர்களைச் சோதனையிட்டதில் 65 வெளிநாட்டினர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லை என்பதால் அவர்களைக் கைது செய்துள்ளதாக குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட அனைவரும் Indonesia, Bangladesh, Myanmar, Nepal, Pakistan ஆகிய நாடுகளைச் சேர்ந்த 20 முதல் 54 வயதுக்குற்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. Janda Baik காட்டுப் பகுதியில் உள்ள 19 பகுதிகளில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் ஒரு சில வெளிநாட்டினர்கள் சோதனையின் போது தப்பி ஓடியதாகவும் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. காலை 10 மணிக்குத் தொடங்கிய இச்சோதனை நடவடிக்கை இரவு 8 மணி வரையில் நீடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

