மாதம் RM 20,000 லஞ்சம் பெற்ற குடிநுழைவு அதிகாரிகள் குடும்பத்துடன் கைது!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 6,

வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சட்டவிரோதமாகத் தங்க வைப்பதற்காகக் கடந்த 2021 முதல் 2025 வரையில் மாதம் RM 20,000 லஞ்சம் பெற்றதாகச் சந்தேகிக்கப்பட்ட 3 குடிநுழைவுத் துறை அதிகாரிகளும் நேற்று மலாக்கா லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்தில் விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டனர். மலாக்கா மாநிலக் குடிநுழைவுத் துறையின் மூத்த அதிகாரி தனது 37 வயது மனைவியின் மூலமாகத் தனியார் நிறுவனங்களிடம் லஞ்சத்தை வசூலித்து வந்தததாகத் தெரிய வந்துள்ள நிலையில் அவரின் மனைவுடன் மொத்தம் நால்வர் கைது செய்யப்பட்டு இன்று மலாக்கா Majistret நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். 

கடந்த 2025 ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையில் மலாக்காவில் உள்ள ஒரு தனியார் உணவக உரிமையாளரிடமிருந்து ஒவ்வொரு மாதமும் RM1,950 வரையில் லஞ்சம் கேட்டு பெற்றதாகச் சந்தேகிக்கப்பட்ட 30 முதல் 50 வயதுக்குற்பட்ட நால்வரும் இது போல பல தனியார் நிறுவனங்களிடமிருந்தும் மாதா மாதம் லஞ்சம் பெற்றதாக நம்பப்படுகிறது. நேற்று காலை 11.50 மணி முதல் மாலை 4.50 மணி வரைக்கும் சம்மந்தப்பட்ட நால்வரையும் மலாக்கா லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்ததில் முறையான ஆவணங்கள் இல்லாமல் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வரும் வெளிநாட்டினர்களைக் கைது செய்யாமல் இருக்கவும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும் இந்த லஞ்சம் பெறப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைக்காகக் கைது செய்யப்பட்ட நால்வரையும் 6 நாள்கள் தடுப்புக் காவலில் விசாரிக்க இன்று மலாக்கா Majistret நீதிமன்றம் உத்தரவிட்டது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *