RM 1 மில்லியன் மதிப்பிலானப் போதைப்பொருளுடன் ஆடவர் கைது!
- THINAGAREN SANGGAREN
- 18 Mar, 2026
மார்ச் 18,
ஜொகூர் காவல்துறை மேற்கொண்ட சோதனையில் 10 லட்சம் ரிங்கிட் மதிப்பிலானப் போதைப்பொருளுடன் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Rahaman Arsad தெரிவித்தார். சந்தேகத்திற்குரிய 36 வயதான ஆடவரின் வாகனம் ஜொகூர் சாலைகளில் சுற்றி வந்ததைக் கண்காணித்த காவல்துறை வாகனத்தைப் பின் தொடர்ந்ததாகவும், சம்மந்தப்பட்ட வாகனமோட்டி சாலையோரக் கடைகளில் பெட்டிகளை இறக்கி வைக்கும் போது கைது செய்யப்பட்டதாக Datuk Ab Rahaman Arsad தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட ஆடவரிடமிருந்து 20 கிலோ எடையிலான syabu வகை போதைப்பொருள்களைக் காவல்துறை பறிமுதல் செய்தததாகவும் ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Rahaman Arsad தெரிவித்தார். கைது செய்யப்பட்ட ஆடவர் கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் ஜொகூரின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள்களைக் கடத்தி வருவதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட ஆடவரின் பின்னணியில் இருக்கும் மற்றவர்களையும் காவல்துறை அடையாளம் கண்டிருப்பதாகவும் அவர்களையும் கண்காணித்து வருவதாகவும் ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Rahaman Arsad தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



