ஜொகூர் சட்டமன்றம் கலைப்பு! விரைவில் தேர்தல்!
- THINAGAREN SANGGAREN
- 01 Jun, 2026
ஜூன் 1,
ஜொகூர் மாநில அரசு அதிகாரப்பூர்வமாக இன்று கலைக்கப்பட்டதாக அதன் மெந்திரி பெசார் Datuk Onn Hafiz Ghazi இன்று நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். 56 சட்டமன்றங்களைக் கொண்டிருக்கும் ஜொகூர் மாநிலத்தில் இன்று முதல் அடுத்த 60 நாள்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 மார்ச் மாதம் நடைபெற்ற ஜொகூர் மாநிலத் தேர்தலில் 40 சட்டமன்றங்களில் வெற்றி பெற்ற பாரிசான் தனித்து ஆட்சி அமைத்தது. மாநில ஆட்சி அதிகாரச் சட்டத்தின்படி 2027 ஏப்ரல் வரையும் பாரிசான் தலைமையிலான ஆட்சி நிலைத்திருக்க வேண்டும். ஆனால் காலவரைவுக்கு முன்னமே Datuk Onn Hafiz Ghazi மாநிலச் சட்டமன்றத்தைக் கலைத்துள்ளார்.
2027 வரையும் நீடித்திருக்க வேண்டிய ஜொகூர் மாநில அரசு தற்போது கலைக்கப்பட்டுள்ளதால் தேர்தல் ஆணையம் ஜொகூர் மாநிலத்தில் தேர்தல் நடத்த வேண்டியதாக உள்ளது. ஒற்றுமை கூட்டணியில் பாரிசானும் பக்காத்தானும் இணைந்து ஆட்சி அமைத்தாலும் ஜொகூரில் 2022 முதல் பாரிசான் மட்டுமே ஆட்சி செய்து வந்தது. எதிர்கட்சியாகப் பக்காத்தான் இருந்தது. இந்நிலையில் ஜொகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் தனித்துப் போட்டியிடும் என ஜொகூர் மாநிலப் பாரிசான் தலைவர் Datuk Onn Hafiz Ghazi உறுதியளித்தார்.
கடந்த
2022 ஜொகூர் மாநிலத் தேர்தலில் பாரிசான் 40 சட்டமன்றங்களில் வெற்றிப் பெற்றிருந்தது.
பக்காத்தான் கூட்டணியில் டி.ஏ.பி 10 சட்டமன்றங்களிலும், பி.கே.ஆரும் அமானாவும்
தலா ஒரு சட்டமன்றத்திலும் வெற்றிப் பெற்றிருந்தனர். பெரிக்காத்தான் 3 சட்டமன்றங்களிலும்
மூடா கட்சி 1 சட்டமன்றத்திலும் வெற்றிப் பெற்றிருந்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



