தொலைபேசியை ஓட்டுக்கேட்கும் கும்பல்! Johor மெந்திரி பெசார் குற்றச்சாட்டு!
- THINAGAREN SANGGAREN
- 23 May, 2026
மே 23,
தன்னுடைய தனிப்பட்ட தொலைபேசியை ஒரு கும்பல் ஒட்டுக்கேட்பதாக Johor மெந்திரி பெசார் Datuk Onn Hafiz Ghazi குற்றம் சாட்டினார். இது யாருடைய செயலாக இருந்தாலும் சரி, தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என Johor மாநில பாரிசான் தலைவருமான Datuk Onn Hafiz Ghazi எச்சரிக்கை விடுத்தார்.
இது தற்செயலாக நிகழ வாய்ப்பில்லை. குறிவைத்து என்னை வேவு பார்க்கும் ஒரு கூட்டத்தின் செயல் இது என, APPLE நிறுவனம் அவருக்கு அனுப்பிய பாதுகாப்பு எச்சரிக்கையை Datuk Onn Hafiz Ghazi சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து தேசிய பல்லூடகப் பாதுகாப்பு ஆணையமான MCMC, காவல் நிலையத்திலும் புகார் அளிக்கவிருப்பதாகவும் Datuk Onn Hafiz Ghazi தெரிவித்தார்.
முன்னதாக Johor மாநில சட்டமன்றம் கலைக்கப்படவிருப்பதாகவும் அடுத்த மாநில சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் தனித்து போட்டியிடும் என்றும் ஆட்சிக் குழு உறுப்பினர்களிடையே ரகசிய கூட்டம் நடைபெறும் என்றும் Johor மாநில மெந்திரி பெசாரும் Johor மாநில பாரிசான் தலைவருமான Datuk Onn Hafiz Ghazi வெளிப்படையாக அறிவித்திருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



