ஜொகூர் அரசாங்கம் இஸ்லாத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும்! ஜொகூர் பாஸ் தலைவர்!
- THINAGAREN SANGGAREN
- 21 Jul, 2026
ஜூலை 21,
ஜொகூர் மாநிலத் தேர்தலில் பெரும்பான்மையில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கும் பாரிசான் கூட்டணி இஸ்லாத்திற்கு முன்னுரிமை அளிக்கும் மாநில அரசாகத் திகழ வேண்டும் என ஜொகூர் மாநிலப் பாஸ் கட்சித் தலைவர் Datuk Dr Mahfodz Mohamed வலியுறுத்தினார். ஜொகூரின் புதிய அரசாங்கத்திற்குப் பாராட்டைத் தெரிவித்தாலும் கடந்த காலங்களைப் போல அல்லாமல், இஸ்லாத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் தரப்பினர்களை ஜொகூர் மாநில அரசு அடையாளம் காண வேண்டும் என Datuk Dr Mahfodz Mohamed தெரிவித்தார். இஸ்லாத்தின் மீதான நம்பிக்கையை நேர்மையான ஆட்சியின் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என Datuk Dr Mahfodz Mohamed பாரிசான் கூட்டணிக்கு வலியுறுத்தினார். ஜொகூர் தேர்தலில் பாரிசான் அடைந்த வெற்றிக்குப் பாஸ் கட்சியின் பங்களிப்பை மாநில அரசு நினைவில் கொள்ள வேண்டும் என்றும் மாநில நன்மைக்காகப் பாஸ் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் என ஜொகூர் மாநிலப் பாஸ் கட்சி தலைவரான Datuk Dr Mahfodz Mohamed உறுதியளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



