அறிவுள்ள மெந்திரி பெசாரைத் தேர்ந்தெடுங்கள்! அன்வார் வேண்டுகோள்!
- THINAGAREN SANGGAREN
- 17 Jun, 2026
ஜூன் 17,
எதிர்வரும் ஜொகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் ஜொகூர் மக்கள் அறிவுள்ள மெந்திரி பெசாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim வேண்டுகோள் விடுத்தார். மாநிலத்தை வழிநடத்தும் மெந்திரி பெசார், பிரதமருடன் நல்ல உறவில் இருக்க வேண்டும் என்பதை விடவும் அமைச்சர்களிடம் ஆணவமாக நடந்துக்கொள்ள கூடாது என Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.
அரசியல்வாதியாக இருக்கும் போது நாம் ஆணவத்துடன் இருப்பதால் மக்கள் பாதிக்கபடமாட்டார்கள். ஆனால் பொறுப்புள்ள மெந்திரி பெசார் பதவியில் அமர்ந்துக்கொண்டு அமைச்சர்களிடம் ஆணவத்துடன் நடந்துக்கொள்வதால் பாதிக்கப்படுவது மக்கள் நலத்திட்டங்கள் என Datuk Seri Anwar Ibrahim நினைவூட்டினார். தேசிய அளவில் அனைத்து மக்களுக்குமான நலத்திட்டங்களை மடானி அரசு அறிமுகப்படுத்தினாலும் மாநிலத் தலைவர்கள், ஆட்சிக் குழு உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் இல்லாமல் முழுமையாகச் செயல்படுத்த முடிவதில்லை என Datuk Seri Anwar Ibrahim வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



