ஜொகூரில் 21 பெண்கள் உட்பட 92 வெளிநாட்டினர்கள் கைது!
- Thinagaren Sanggaren
- 30 Nov, 2025
நவம்பர் 30,
சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைந்து வேலை செய்து வந்த 92 வெளிநாட்டினர்கள் நேற்று ஜொகூர் தம்போயில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை 4 மணிக்குத் தம்போயில் உள்ள வணிகக் கடைகளிலும் சாலையோரக் கடைகளிலும் ஜொகூர் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனையில் மொத்தம் 92 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் DATO MOHD RUSDI DARUS தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் SRI LANKA, INDIA, MYANMAR, INDONESIA, PAKISTAN, BANGLADESH ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் போலி பாஸ்போர்ட்களைப் பயன்படுத்தி வருவதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜொகூர் தம்போய் இண்டா பகுதியில் வெளிநாட்டினர்களின் நடமாட்டம் அதிகமாகியிருந்த நிலையில் ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை OPS SELERA, OPS BELANJA, OPS MAHIR, OPS SAPU, OPS PINTU என 5 தனிப்படைகள் அமைத்து ஜொகூர் முழுமையாகச் சோதனையை மேற்கொண்டு வருவதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் DATO MOHD RUSDI DARUS தெரிவித்தார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



