இரு குடும்பத்தினரிடையே சண்டை! காணொலி பரவியதால் 3 பெண்கள் உட்பட 6 பேர் கைது!

top-news

ஜொகூரில் இரு கும்பலுக்கு இடையே கைகலப்பு ஏற்படும்படியானக் காணொலில் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து தென் மாவட்டக் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் காவல் உதவி ஆணையர் Raub Selamat இன்று தெரிவித்தார். நேற்று நண்பகல் 1 மணியளவில் ஜொகூர்  Bayu Puteri சாலையில் கைகலப்பில் ஈடுபட்டதாக 3 ஆண்களையும் 3 பெண்களையும் கைது செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இரு குடும்பத்தினர்களின் பிள்ளைகளின் மூலமாகத் தொடங்கிய பிரச்சனை கைகலப்பில் முடிந்ததாக, கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்ததாக காவல் உதவி ஆணையர் Raub Selamat தெரிவித்தார். 27 வினாடிகள் கொண்ட சம்மந்தப்பட்ட காணொலியின் அடிப்படையில் இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். காணொலியில் உள்ள மற்றவர்களையும் தேடி வருவதாக அவர் தெரிவித்தார்

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்