மதுபோதையில் வாகனம் ஓட்டும் குற்றங்களுக்கு கடும் தண்டனை: சட்ட திருத்தம் தொடங்கியது
- Surendran Sumdraraj
- 03 Apr, 2026
புத்ராஜெயா, ஏப். 3-
மதுபோதையிலும் போதைப்பொருள் தாக்கத்திலும் வாகனம் ஓட்டும் குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க, சாலை போக்குவரத்து சட்டம் 1987 (Akta Pengangkutan Jalan 1987) மீளாய்வு செய்யும் பணியை சாலை போக்குவரத்து துறை (JPJ) தொடங்கியுள்ளதாக ஜேபிஜே இயக்குநர் ஜெனரல் டத்தோ ஸ்ரீ ஏடி பட்லி ரம்லி தெரிவித்ததார்.
இந்த சட்ட திருத்தம் துறையின் சட்டப்பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக, சாலை போக்குவரத்து சட்டத்தின் பிரிவு 44 மற்றும் பிரிவு 45 ஆகியவை முழுமையாக மறுபரிசீலனை செய்யப்படுகின்றன.
இந்த மாற்றங்கள் முதலில் உள்துறை ஆய்வாக நிறைவேற்றப்பட்ட பின்னர், மேலதிக நடவடிக்கைக்காகப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு (MOT) சமர்ப்பிக்கப்படும் என்று அவர் கூறினார்.
மேலும், போக்குவரத்து அமைச்சர் வழங்கிய உத்தரவின் பேரில், மதுபோதையிலும் போதைப்பொருள் தாக்கத்திலும் வாகனம் ஓட்டும் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும் என்றும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் நடைமுறையும் கொண்டு வரப்படும் என்றும் அவர் விளக்கினார்.
இந்த முயற்சி, சாலை விபத்துகளை குறைப்பதோடு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



