‘Ops Luxury’ அதிரடி - முன்னாள் தேசிய கால்பந்து வீரர், பிரபல தன்முனைப்பு பேச்சாளர் கைது
- Surendran Sumdraraj
- 25 May, 2026
கோலாலம்பூர்,மே 25-
சாலை போக்குவரத்து துறை (JPJ) மேற்கொண்ட “Ops Luxury” சிறப்பு நடவடிக்கையில், முன்னாள் தேசிய கால்பந்து வீரர் ஒருவரும், ‘டத்தோ’ பட்டம் பெற்ற பிரபல தன்முனைப்பு பேச்சாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் சொகுசு வாகனங்களும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.
பலமுறை மலேசிய சூப்பர் லீக் பட்டம் வென்ற அணியில் விளையாடியிருந்த முன்னாள் தேசிய கால்பந்து வீரர், நேற்று அதிகாலை 4 மணியளவில் புக்கிட் பிந்தாங் பகுதியில் சொகுசு Toyota Vellfire MPV வாகனத்தை ஓட்டிச் சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டார்.
சோதனையில், வாகனத்தின் ஆவணங்கள் மற்றும் அனுமதிப்பத்திரங்களில் முறைகேடுகள் இருப்பது கண்டறியப்பட்டதாக JPJ தெரிவித்துள்ளது.
அதேவேளை, பிரபல தொழில் முனைவோர் மற்றும் தன்முனைப்பு பேச்சாளராக அறியப்படும் ‘டத்தோ’ பட்டம் பெற்ற நபர், கிள்ளான பள்ளத்தாக்கு பகுதியில் Mercedes Benz Brabus AMG சொகுசு காரை ஓட்டிச் சென்றபோது கைது செய்யப்பட்டார்.
அவரது வாகனத்தின் சாலைவரி (LKM) காலாவதியானதுடன், காப்புறுதி பாதுகாப்பும் இல்லாதது விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் கூறினர்.
இந்த இரு வாகனங்களும் சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டதாகவும், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் JPJ தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



