கூடுதல் கட்டணம் வசூலித்த பேருந்துகள் பறிமுதல்! – JPJ JOHOR!
- THINAGAREN SANGGAREN
- 07 May, 2026
மே 7,
ஜொகூர் பேருந்து நிலையத்தில் மாநிலச் சாலைப் போக்குவரத்துத் துறை மேற்கொண்ட சோதனையில் இரு பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பேருந்து ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு வரும் பயணிகளிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடவும் அதிகமாகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் கிடைக்க பெற்றது இச்சோதனையை மேற்கொண்டதாக ஜொகூர் மாநிலச் சாலைப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 4 மணிக்குச் சம்மந்தப்பட்ட இரு பேருந்துகளையும்ம் சோதனையிட்டதில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடவும் பேருந்து ஓட்டுநர்கள் கட்டணம் வசூலித்திருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருப்பதாகவும் மேலதிக விசாரணைகளுக்காகப் பேருந்து ஓட்டுநர்களைத் தடுத்து வைத்திருப்பதாகவும் ஜொகூர் மாநிலச் சாலைப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. பயணிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடவும் மேலதிகக் கட்டணங்களைச் செலுத்த வேண்டிய அவசியமில்லை என ஜொகூர் மாநிலச் சாலைப் போக்குவரத்துத் துறை வலியுறுத்தியது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



