53 பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய தலைமுறை மைகார்ட் நாளை முதல் வெளியீடு
- Surendran Sumdraraj
- 16 Sep, 2026
கோலாலம்பூர், செப். 16-
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட புதிய தலைமுறை மைகாட் அடையாள அட்டையை தேசிய பதிவுத் துறை (JPN) நாளை, செப்டம்பர் 17 முதல் வெளியிடவுள்ளது.
புதிய மைகார்ட் அடையாள அட்டையில் மொத்தம் 53 பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு முன்பு பயன்பாட்டில் இருந்த மைகாட் அட்டையில் 23 பாதுகாப்பு அம்சங்கள் மட்டுமே இருந்ததாகத் தேசிய பதிவுத் துறை தெரிவித்துள்ளது.
காலத்தின் மாற்றத்திற்கும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் ஏற்ப தேசிய அடையாள ஆவணத்தை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் முயற்சியாக புதிய தலைமுறை மைகாட் அறிமுகப்படுத்தப்படுவதாக JPN குறிப்பிட்டுள்ளது.
நாடு முழுவதும் அச்சிடும் வசதியைக் கொண்ட 40 JPN கிளைகளில், புதிய தலைமுறை மைகார்ட் அட்டையை நாளை முதல் பெற்றுக்கொள்ள முடியும். விண்ணப்பம் செய்யப்படும் அதே நாளிலேயே அட்டையைத் தயாரித்து வழங்குவதற்கான வசதியும் இந்த மையங்களில் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



