பேராக் கல்வி இலாகாவில் முதல் பெண் உதவி இயக்குநர் புனிதா சுப்ரமணியம்!
- Thinagaren Sanggaren
- 31 Dec, 2025
டிசம்பர் 31,
பேராக் மாநிலக் கல்வி இலாகாவின் தமிழ்மொழி உதவி இயக்குநராகத் தலைமையாசிரியராக இருந்த திருமதி. புனிதா சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். பேராக் மாநிலத்தில் உள்ள அலகார் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்த இவர் ஜனவரி 2 முதல் பேராக் மாநிலக் கல்வி இலாகாவின் தமிழ்மொழி உதவி இயக்குநராகப் பொறுப்பேற்பார் என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்ப்பள்ளிகளிலும் இடைநிலைப்பள்ளிகளிலும் தமிழ்க்கல்விக்கான மேம்பாட்டுத் திட்டங்களை வரையறுப்பதற்காகக் கடந்த 2001 ஆம் ஆண்டு மலேசியாவின் 10 மாநிலங்களின் கல்வி இலாகாவில் தமிழ்மொழிக்கென உதவி இயக்குநர் பொறுப்புகள் தொடங்கப்பட்டது. நாட்டின் அதிகமான தமிழ்ப்பள்ளிகளைக் கொண்டிருக்கும் மாநிலமாக இருக்கும் பேராக்கின் முதல் தமிழ்மொழி உதவி இயக்குநராக முனைவர் சாமிகண்ணு ஜெபமணி 2000 ஆம் ஆண்டு முதல் 2009 வரையில் பொறுப்பிலிருந்தார். 2010 முதல் 2012 வதையில் திரு.தேவதாஸ் சுப்ரமணியமும், 2012 முதல் திரு சந்திர சேகரனும் பொறுப்பு வகித்த நிலையில் தற்போது பேராக் மாநிலக் கல்வி இலாகாவின் தமிழ்மொழி உதவி இயக்குநராகத் திருமதி. புனிதா சுப்பிரமணியம் பொறுப்பேற்றுள்ளார்.
பேராக் மாநிலக் கல்வி இலாகாவின் தமிழ்மொழி உதவி இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கும் திருமதி. புனிதா சுப்பிரமணியம் Sultan Abdul Halim ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி பட்டம் பெற்று, menglembu மெகுலெம்பூ தமிழ்ப்பள்ளியிலும், ஈப்போ செட்டியார் தமிழ்ப்பள்ளியிலும் ஆசிரியராகப் பணியாற்றி 2019 ஆம் ஆண்டு அலகர் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றுள்ளார். பேராக் மாநிலத்தின் முதல் பெண் தமிழ்மொழி உதவி இயக்குநராகப் பொறுப்பேற்று புதிய வரலாற்றையும் திருமதி. புனிதா சுப்பிரமணியம் பதித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



