2027 தொடக்கம் வரை நீடிக்கும் எல் நினோ: நீர் வளங்களைப் பாதுகாக்க மலேசியா தயார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 11-

எல் நினோ வானிலை நிகழ்வு 2027ஆம் ஆண்டின் தொடக்கம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதனை எதிர்கொள்ள நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (ஜேபிஎஸ்) தனது தயார் நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, நாட்டின் நீர் வளங்கள் நிகழ்நேர அடிப்படையில் கண்காணிக்கப்படுவதுடன், முன்கூட்டிய தகவல்களை வழங்குதல் மற்றும் களத்தில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள், செயல்பாடுகளை தயார் நிலையில் வைத்திருத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மலேசிய வானிலை ஆய்வுத் துறை, கடந்த ஜூலை 29ஆம் தேதி வெளியிட்ட நீண்டகால வானிலை முன்னறிவிப்பில், தீபகற்ப மலேசியாவின் மேற்கு, கிழக்கு மற்றும் தெற்குக் கடலோரப் பகுதிகளில் மழைப்பொழிவு குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், சரவாக்கின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகளிலும், சபாவின் கிழக்குப் பகுதிகளிலும் மழைப்பொழிவு குறையக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால், நாட்டின் பல பகுதிகளில் வறட்சி ஏற்படும் அபாயம் அதிகரிப்பதுடன், நீர் வளங்கள் மற்றும் குடிநீர் விநியோகத்திலும் அழுத்தம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *