ராக்கான் மூடா திட்டத்தில் 39.6 இலட்சம் இளைஞர்கள் பங்கேற்பு

top-news

கோலாலம்பூர், பிப். 12-

கடந்த ஆண்டு “ராக்கான் மூடா” (Rakan Muda) திட்டத்தில் இளைஞர்களின் பங்கேற்பு விகிதம் 41.26 சதவீதமாக உயர்ந்து, சுமார் 39.6 இலட்சம் பேர் இதில் இணைந்ததாக இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் முகமது தௌபிக் ஜோஹாரி  தெரிவித்தார். இது, நாட்டில் உள்ள 96.6 இலட்சம் இளைஞர்களில் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த 25 சதவீதம் (24.2 இலட்சம் பேர்) என்பதை விட குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாகும்.

 2023 ஆம் ஆண்டு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம், பரந்த அளவில் இளைஞர்களைச் சென்றடைந்ததையே இந்த சாதனை காட்டுகிறது என்றார் அமைச்சர்.

மேலும், ராக்கான் மூடா திட்டத்தின் செயல்திறன் “அவுட்புட்” மற்றும் “அவுட்கம்” எனப்படும் இரண்டு முக்கியக் குறியீடுகளை இணைத்து முழுமையாக மதிப்பீடு செய்யப்படுவதாகவும் அவர் விளக்கினார். இதில் இளைஞர்களின் செயலில் ஈடுபாடு, திறன் வளர்ச்சி, நல்லொழுக்க மதிப்புகள் வலுப்படுத்தல், சமூக இணைப்பு வலையமைப்பு உருவாக்கம் போன்றவை அடங்கும்.

இந்த ஆண்டு, வெறும் எண்ணிக்கையை மட்டும் பார்க்காமல், திட்டத்தின் தரமான தாக்கத்தை மதிப்பிடும் வகையில் அமைச்சகம் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *