காஜாங்கில் 171 வெளிநாட்டினர்கள் கைது! நிறுவனத்திற்கு RM 15,000 சம்மன்!
- Thinagaren Sanggaren
- 11 Jan, 2026
ஜனவரி 11,
காஜாங்கில் உள்ள தொழில்சாலையில் சட்டவிரோதமாகப் பணிக்கு அமர்த்தப்பட்ட 171 வெளிநாட்டினர்களைக் கைது செய்ததுடன், முறையான ஆவணங்கள் இல்லாமல் வெளிநாட்டினர்களைப் பணிக்கு அமர்த்திய இரு வெவ்வேறு நிறுவனத்திற்குத் தலா RM 15,000 ரிங்கிட் சம்மன் வழங்கப்பட்டுள்ளது. காஜாங்கில் உள்ள ஒரு தொழில்சாலையிலும் SEMENYIH-இல் உள்ள கட்டுமானப் பகுதியிலும் வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதாகப் பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததும் இச்சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தேசிய் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
காஜாங்கிலும் SEMENYIH-லும் உள்ள இரு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 189 வெளிநாட்டினர்களும் 27 உள்ளூர்வாசிகளும் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் 29 முதல் 50 வயதுக்குற்பட்ட Bangladesh, Myanmar, India, Nepal. Indonesia ஆகிய நாடுகளைச் சேர்ந்த 171 பேர் எந்தவொரு தொழிலாளர் ஆவணங்களையும் கொண்டிருக்காமல் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு சில வெளிநாட்டினர்கள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வந்ததால் அவர்களுக்கு வெளிநாட்டுத் தொழிலாளர் உரிமத்தை நிறுவனம் வழங்கியிருப்பதாகவும் மற்றவர்கள் புதிய தொழிலாளர்கள் என்பதால் வெளிநாட்டுத் தொழிலாளர் உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாகப் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட இரு பகுதிகளுக்கும் ஒரே வெளிநாட்டுத் தொழிலாளர் நிறுவனம் தொழிலாளர்களைக் குத்தகைக்கு வழங்கி வருவதால் சம்மந்தப்பட்ட தொழிலாளர் நிறுவனத்தின் உரிமையாளரும் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக மலேசியக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



