பாஸ் – பெர்சத்து மோதலுக்கு மத்தியில் கெராக்கான், MIPP-யின் குரலும் முக்கியம்
- Surendran Sumdraraj
- 06 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 6 –
பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணிக்குள் பாஸ் மற்றும் பெர்சத்து தலைவர்களிடையே அண்மையில் ஏற்பட்ட கருத்து மோதல்கள் அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற இரு கட்சிகளான கெராக்கான் மற்றும் மலேசிய இந்திய மக்கள் கட்சி (MIPP) மீதான கவனம் குறைந்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பாஸ் மற்றும் பெர்சத்து தலைவர்கள் ஊடகங்கள் வாயிலாக பரஸ்பரம் கருத்துகளை பரிமாறிக் கொண்டிருப்பது கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாகும் என்ற ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் கெராக்கான் மற்றும் MIPP ஆகிய கட்சிகள் பெரிதாகப் பேசப்படாமல் பின்தங்கியுள்ளன என்ற கருத்தும் எழுந்துள்ளது.
எனினும், பல இன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய கூட்டணியாகத் தன்னை முன்னிறுத்திக் கொள்ள விரும்பும் பெரிக்காத்தான் நேஷனலுக்கு, கெராக்கான் மற்றும் MIPP ஆகிய கட்சிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த MIPP தலைவர் P Punithan மற்றும் கெராக்கான் தலைவர் Dominic Lau, கூட்டணியின் எதிர்காலம் பல இன மக்களின் ஆதரவைப் பெறுவதில்தான் உள்ளது என்று வலியுறுத்தியுள்ளனர்.
மலாய், சீனர், இந்தியர் உள்ளிட்ட அனைத்து சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் அணியாக PN உருவெடுக்க வேண்டுமென இரு தலைவர்களும் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



