அமெரிக்காவில் விளையாட மறுக்கும் ஈரான்

top-news
FREE WEBSITE AD

தெஹ்ரான், மார்ச் 19-

உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கான தங்களது தயாரிப்புகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் ஈரான் தேசிய கால்பந்து அணி, போட்டியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை என்று கால்பந்து சங்கத் தலைவர் மெஹ்தி தாஜ் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் அணிகளில் ஒன்றாக ஈரான் இருந்தாலும், கடந்த பிப்ரவரி இறுதியில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக, அவர்களின் பங்கேற்பு குறித்து சந்தேகங்கள் எழுந்தன.

இந்த உலகக் கோப்பை போட்டிகள் வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறவுள்ளன. அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து இந்தப் போட்டியை நடத்தவுள்ளன.

“டீம் மெலி” என அழைக்கப்படும் ஈரான் அணி, குழு நிலை போட்டிகளில் மூன்றையும் அமெரிக்காவில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அந்தப் போட்டிகளை மெக்சிகோவில் நடத்துவதற்காக ஈரான் கால்பந்து சம்மேளம் (FFIRI), FIFA-வுடன் ஆலோசனை நடத்தி வருகிறது என்று தாஜ் தெரிவித்தார்.

அத்துடன், அணியின் தயாரிப்புகள் வழக்கம்போல நடைபெற்று வருவதாகவும், போட்டியில் பங்கேற்கும் உறுதி தொடர்கிறது என்றும் அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *