காணாமல் போன 2 வயது சிறுவன்! சடலமாக மீட்பு!

top-news

பிப்ரவரி 27,

2 நாள்களாகத் தேடப்பட்டு வந்த 19 மாதச் சிறுவன் 45 மணிநேரத்திற்குப் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார். கிளாந்தான் தானா மேரா பகுதியில் உள்ள Kampung Kerila குடியிருப்புப் பகுதியிலிருந்து காணாமல் போன 2 வயதான Hud Aryan எனும் சிறுவன் அருகிலுள்ள ஆற்றில் விழுந்ததாக நம்பப்பட்ட நிலையில் கடந்த 45 மணி நேரமாக 30க்கும் மேற்பட்ட மீட்பு அதிகாரிகளுடன் தேடுதல் வேட்டையை மேற்கொண்டதாக Tanah Merah மாவட்டக்காவல் ஆணையர் Mohd Haki Hasbullah தெரிவித்தார். 

காணாமல் போன சிறுவன் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்ததாகவும் அவர் பாட்டி வீட்டில் வளர்வதாகவும் தெரிய வந்துள்ளது. இறுதியாகச் சிறுவன் காணாமல் போன இடத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மரக்கிளைகளிலிருந்து மீட்கப்பட்டதாக Tanah Merah மாவட்டக்காவல் ஆணையர் Mohd Haki Hasbullah தெரிவித்தார்.

Hud Aryan, 19 bulan yang hilang dua hari lepas ditemui lemas. Dipercayai terjatuh ke dalam sungai berhampiran Kampung Kerila. Mayatnya dijumpai tersangkut pada dahan pokok, tujuh kilometer dari lokasi terakhir dia dilihat. Kes diklasifikasikan sebagai mati mengejut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *