லாரியின் பின் மோதிய வாகனம்! சிறுவன் பலி! ஐவர் படுகாயம்!
- Sangeetha K Loganathan
- 24 Jan, 2025
ஜனவரி 24,
இன்று அதிகாலை கிழக்கு கடற்கரை செடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 12 வயது சிறுவன் உயிரிழந்ததுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகாயம் அடைந்தனர். 41 வயது நபர் ஓட்டிய Toyota Alphard ரக வாகனம் பழுதடைந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மோதியதாக மாரான் மாவட்டக் காவல் ஆணையர் Wong Kim Wai தெரிவித்தார்.
நெடுஞ்சாலையில் லாரியின் டயர் பழுதடைந்ததால் லாரியை அவசரச் சாலை பகுதியான EMERGENCY LINE-இல் நிறுத்தியதாக 35 வயது லாரி ஓட்டுநர் தெரிவித்தார். கட்டுப்பாட்டை இழந்த Toyota Alphard ரக வாகனம் லாரியின் பின்னால் மோதியதால் வாகனத்தில் இருந்த 12 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் ஓட்டுநரும் அவரின் மனைவி மேலும் 3 பிள்ளைகள் பலத்த காயத்திற்குள்ளானதாக Wong Kim Wai தெரிவித்தார்.
Seorang kanak-kanak lelaki Muhammad Al Amin Mohd Adil maut manakala lima ahli keluarganya cedera parah selepas Toyota Alphard yang dinaiki mereka melanggar belakang lori di KM 164.7 LPT. Pemandu lori tidak cedera.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



