பள்ளத்தாக்கில் கவிழ்ந்த கார்! 5 வயது சிறுமி பலி!

- Sangeetha K Loganathan
- 12 Feb, 2025
பிப்ரவரி 12,
பெந்தோங்கிலிருந்து ரவூப் செல்லும் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 வயது சிறுமி பலியானதாக ரவூப் மாவட்டக் காவல் ஆணையர் Mohd Shahril Abdul Rahman தெரிவித்தார். நேற்று மாலை TRAS பாலத்தில் விபத்து ஏற்பட்டதாகப் பெறப்பட்ட புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு மீட்புப் படையுடன் விரைந்ததாகவும் 30 வயது ஆடவர் ஓட்டிச் சென்ற வாகனம் சுமார் 10 மீட்டர் ஆழத்தில் கவிழ்ந்திருந்ததாக ரவூப் மாவட்டக் காவல் ஆணையர் Mohd Shahril Abdul Rahman தெரிவித்தார்.
சம்பவ இடத்திலேயே 5 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் வாகனத்தைச் செலுத்திய 30 வயது தந்தை காயங்களுடந் தப்பியதாகவும் கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தி தடுப்புச் சுவரை மோதிய வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Seorang kanak-kanak perempuan berusia lima tahun maut selepas kereta yang dipandu bapanya hilang kawalan sebelum terbabas dan terjunam ke dalam gaung sedalam 10 meter di Jalan Bentong-Raub. Kemalangan berlaku berhampiran Jambatan Tras serta bapanya mengalami kecederaan ringan
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *