விபத்தில் தூக்கி வீசப்பட்ட 7 வயது சிறுமி மற்றொரு வாகனத்தில் மோதி பலி!

top-news

ஏப்ரல் 8,

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் நெடுஞ்சாலையின் தடுப்புச் சுவரை மோதி விபத்துக்குள்ளானதில் தூக்கி வீசப்பட்ட 7 வயது சிறுமி எதிரே வந்த வாகனத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மாரான் மாவட்டக் காவல் ஆணையர் Wong Kim Wai தெரிவித்தார். பிற்பகல் 1.40 மணிக்குக் கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலையின் மாரான் அருகில் இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர் தெரிவித்தார்.

கோலாலம்பூரிலிருந்து குவாந்தான் நோக்கி செல்லும் சாலையில் 31 வயது பெண் செலுத்திய வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை மோதி விபத்துக்குள்ளானதாகவும் விபத்தின் விளைவாக வாகனத்திலிருந்த 7 வயது சிறுமி வாகனத்திலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டதாகவும் எதிரில் வந்துக் கொண்டிருந்த வாகனத்தில் மோதியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக மாரான் மாவட்டக் காவல் ஆணையர் Wong Kim Wai தெரிவித்தார்.

Seorang kanak-kanak perempuan berusia 7 tahun maut selepas tercampak keluar dari kenderaan yang hilang kawalan dan melanggar pembahagi jalan sebelum dilanggar kenderaan lain di Lebuhraya Pantai Timur berhampiran Maran. Ibu mangsa memandu kenderaan tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *