பெற்றோரால் தாக்கப்பட்ட 7 வயது சிறுமி பலி!
- Sangeetha K Loganathan
- 31 Jan, 2025
ஜனவரி 30,
கடுமையானத் தாக்குதலுக்குள்ளான 7 வயது சிறுமி காஜாங் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது தொடர்பாகச் சந்தேகத்தின் அடிப்படையில் சிறுமியின் பெற்றோரைக் காவல்துறையினர் கைது செய்ததாகக் காஜாங் மாவட்டக் காவல் ஆணையர் NAAZRON ABDUL YUSOF தெரிவித்தார்.
நேற்று அதிகாலை 12.30 மணியளவில் மயங்கிய நிலையில் காஜாங் மருத்துவமனையில் 7 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டதாகவும் உடலின் பல்வேறு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அதிகாலை 1.11 மணிக்குச் சிறுமி உயிரிழந்ததாகக் காவல் ஆணையர் NAAZRON ABDUL YUSOF தெரிவித்தார்.
இது தொடர்பாக 30 வயது 40 வயதுள்ள சிறுமியின் பெற்றோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முரணான வாக்குமூலங்களை இருவரும் வழங்கியதால் அவர்கள் இருவரையும் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளதாகக் காஜாங் மாவட்டக் காவல் ஆணையர் NAAZRON ABDUL YUSOF தெரிவித்தார்.
Seorang kanak-kanak perempuan berusia tujuh tahun meninggal dunia dipercayai akibat dera oleh ibu bapa di Kajang. Didapati banyak kesan cedera lama dan baru pada fizikal mangsa. Ibu bapa ditahan bagi membantu siasatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



