சொகுசு கப்பலில் உல்லாசம்! நடுக்கடலில் 5 இளைஞர்கள் கைது!
- THINAGAREN SANGGAREN
- 09 Apr, 2026
ஏப்ரல் 9,
லங்காவி கடல்பகுதியில் கடல் எல்லையை மீறி பயணித்த சொகுசு கப்பலைக் கடல்சார் பாதுகாப்பு ஆணையம் தடுத்து நிறுதியது. நேற்று மாலை 5.20 மணிக்குச் சந்தேகத்திற்குரிய சொகுசு கப்பல் பயணிகளுடன் கடல் எல்லையை மீறி சர்வதேசக் கடல் எல்லைக்குள் சென்றதைக் கண்ட ரோந்து பணி கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகள் சம்மந்தப்பட்ட சொகுசு கப்பலை நிறுத்தியதாகவும் கப்பலில் உல்லாசமாக இருந்த 30 க்கும் மேற்பட்ட பயணிகளைச் சோதனையிட்டதாகவும் வடக்கு கடல்சார் எல்லை பாதுகாப்பு ஆணையத்தின் இயக்குநர் Romli Mustafa தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட சொகுசு படகு தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமானது என்றும் கப்பலின் பணியாளர்கள் உட்பட 5 உள்ளூர்வாசிகளைக் கைது செய்திருப்பதாகவும் Romli Mustafa தெரிவித்தார். கைது செய்யப்பட்ட ஐவரும் 23 முதல் 37 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் Romli Mustafa தெரிவித்தார். கப்பலில் இருந்த பயணிகள் அனைவரும் சுற்றுலா பயணிகள் என்பதால் அவர்களைக் கெடா துறைமுகத்தில் தடுத்து வைக்கத்திருப்பதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வடக்கு கடல்சார் எல்லை பாதுகாப்பு ஆணையத்தின் இயக்குநர் Romli Mustafa தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



