காப்பார் இந்து சங்கத்தின் 13 ஆம் ஆண்டாகத் தொடரும் ரத்த தான முகாம்!

top-news
FREE WEBSITE AD

பிப்ரவரி 16,

கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் ரத்த வங்கி மருத்துவர்கள் தாதியர்கள் குழு ஆதரவுடன் 13 ஆம் ஆண்டு ரத்த தானம் முகாம் நேற்று ஞாயிறு 15/2/2026 கிள்ளான் பத்து பெலா இயோன் பிக் பேரங்காடி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த ரத்தத் தான முகாம் 13 ஆவது ஆண்டாகத் தொடர்ச்சியாக நடத்தப்படுகிறது என  காப்பார் வட்டார இந்து சங்கத் தலைவர் விவேகரத்னா அருள்நேசன் ஜெயபாலன் தெரிவித்தார்.


இந்த முகாமில் 144 பேர் ரத்த தானம் வழங்க தங்களைப் பதிவு செய்து கொண்ட நிலையில் மருத்துவப் பரிசோதனையில் 113 பேர் ரத்த தானம் வழங்க தகுதியானவர்களாகக் கண்டறியப்பட்டு ரத்த ரத்த தானம் வழங்கியதாக ரத்த தான முகாமின் ஏற்பாட்டுக் குழு தலைவர் சிவராம் அர்ஜூனன் குறிப்பிட்டார். சாலை விபத்துகளில் சிக்கி உயிருக்குப் போராடும் மக்களுக்கும், நோய் காரணமாக நீண்ட காலம் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கும் விழாக்காலத்தில் ஏற்படும் ரத்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கத்தில் இந்த இரத்ததானம் முகாம் நடைபெற்றதாக அவர் கூறினார்.


இந்நிகழ்வில் சிறப்பு வருகையாளராக சுகாதார அமைச்சரின் அரசியல் செயலாளர், துவான் ஹாஜி முகமட் பைசல் பின் இஸ்மாயில், காப்பார் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் டத்தோஸ்ரீ அஜிஸி பின் ஹாஜி அயோப் கிள்ளான் அரசு மாநகர் N42A மன்ற உறுப்பினர் துவான் ஹாஜி ஹலீம் செமந்தா சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் டத்தோ ஹாஜி ரோஸ்லி செமந்தா, வடக் கிள்ளான் மாவட்டக் காவல்துறை தலைவர், ஏசிபி விஜயராவ் சமச்சுலு, மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநில இளைஞர் பிரிவு தலைவர் திரு. ரிகேஷ் ஆனந்த், இயோன் பிக் (கிள்ளான்/ஷா ஆலம்) வட்டார மேலாளர், திரு. காளிதாஸ், இயோன் பிக் பத்து பெலா கிள்ளான் மேலாளர் திரு. லோகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *