RM1.86 மில்லியன் மதிப்பிலானப் போலி துப்பாக்கிகள் பறிமுதல்! KASTAM!

- Sangeetha K Loganathan
- 23 Feb, 2025
பிப்ரவரி 23,
கடந்த 2024 ஆம் ஆண்டு போலி ஆயுதங்களை மலேசியாவுக்குள் கடந்த முயன்ற 31 வழக்குகளைச் சுங்கத்துறையினர் முறியடித்துள்ளதாகத் தேசியச் சுங்கத்துறை இயக்குநர் Datuk Anis Rizana Mohd Zainudin தெரிவித்தார். விமானத்தின் மூலமாகக் கடத்தப்பட்ட 31 வழக்குகளின் மொத்த மதிப்பு RM1.86 மில்லியன் என கணக்கிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தனிநபர்கள் ஆயுதங்களைக் கொண்டிருப்பதை அரசு அங்கீகரிக்காத நிலையில் பாதுகாப்பிற்காக ஆயுதமேந்திய காவலை முறையாக அனுமதி பெற்று விமான நிலையங்களுக்குள் நுழையும்படியும் அவர் வலியுறுத்தினார். போலியான ஆயுதங்களைத் தயாரித்து மலேசியாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் Datuk Anis Rizana Mohd Zainudin தெரிவித்தார்.
Jabatan Kastam Diraja Malaysia (JKDM) menyiasat 31 kes pengimportan senjata ringan tiruan bernilai RM1.86 juta pada tahun lalu. Empat kes dikesan melalui Perkhidmatan Pos Malaysia termasuk di Sarawak dan KLIA. JKDM aktif dalam operasi antarabangsa bagi membanteras penyeludupan senjata api dan menggesa orang ramai menyalurkan maklumat berkaitan aktiviti penyeludupan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *