FIFA தரவரிசை சரிவு – ஹரிமாவ் மலாயாவுக்கான முழுமையான சீர்திருத்தம் தேவை: KBS

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 24-

மலேசிய தேசிய கால்பந்து அணி ‘ஹரிமாவ் மலாயா’ FIFA தரவரிசையில் 14 இடங்கள் சரிந்ததைத் தொடர்ந்து, மலேசிய கால்பந்து சங்கம் (FAM) முழுமையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் டாக்டர் முகமது தௌபிக் ஜொஹாரி வலியுறுத்தினார்.

121ஆவது இடத்திலிருந்து 135ஆவது இடத்திற்கு ஏற்பட்ட இந்த வீழ்ச்சி நாட்டின் கால்பந்து அமைப்பை மறுசீரமைக்கும் அவசியத்தை வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார். இந்த நிலைமை எதிர்கால வளர்ச்சிக்கான பாடமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவரது விளக்கப்படி, ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) எடுத்த முடிவினால், 2027 ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றில் வியட்நாம் மற்றும் நேபாளுக்கு எதிராகப் பெற்றிருந்த இரண்டு வெற்றிகள் ரத்து செய்யப்பட்டதே இந்த தரவரிசை சரிவிற்கு முக்கிய காரணமாகும்.

மேலும், கடந்த சில மாதங்களாக தேசிய அணியைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் குறித்து உள்ளூர் கால்பந்து ரசிகர்களின் அதிருப்தியையும்  தாம் பகிர்ந்துகொள்வதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த பின்னணியில், நாட்டின் கால்பந்து வளர்ச்சிக்காக உறுதியான மாற்றங்கள் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *