கத்தார் மற்றும் வளைகுடா நாடுகளில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது - வெளியுறவு அமைச்சர்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 3-

ஆசியா மேற்கு பகுதியில் நிலவி வரும் பிராந்திய பதற்றம் காரணமாக பாதுகாப்பு சூழல் சீர்குலைந்திருந்தாலும், கத்தார் மற்றும் வளைகுடா நாடுகளில் தற்போதைய நிலைமை கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமது ஹசான் தெரிவித்தார்.

அப்பகுதியில் உள்ள மலேசியர்களை வெளியேற்ற அரசாங்கம் இதுவரை அவசர வெளியேற்றத் திட்டத்தை (evakuasi) செயல்படுத்த வேண்டிய நிலை உருவாகவில்லை என்று அவர் சொன்னார்.

“அங்குள்ள நிலைமையை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து கண்காணித்து வருகிறோம். தற்போதைய சூழ்நிலை, வெளியேற்றத் திட்டத்தை செயல்படுத்த வேண்டிய அவசியத்தை உருவாக்கவில்லை,” என்று அவர் விளக்கினார்.

கத்தார் மற்றும் ஆசியா மேற்கு பகுதிகளில் பதற்றம் அதிகரித்ததால் அங்கு ‘சிக்கிக்’ கொண்டிருப்பதாக கூறப்படும் மலேசியர்களைப் பாதுகாப்பாக மீட்க அரசு எவ்வாறு நடவடிக்கை எடுக்கிறது என்று நாடாளுமன்றத்தில்  அஸஹார் ஹசான் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கம் அப்பகுதியில் உள்ள மலேசியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தயாராக உள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *