தொழில்சாலையில் தீ! RM 4 லட்சம் இழப்பு! CHERAS!

top-news
FREE WEBSITE AD

ஏப்ரல் 8,

செராஸில் உள்ள பட்டுத் தொழில்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் RM 4 லட்சம் ரிங்கிட் மதிப்பிலானப் பொருள்கள் தீயில் கருகியது. இரவு 9.32 மணிக்குப் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு 29 தீயணைப்பு அதிகாரிகளுடன் விரைந்ததாகச் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார். சம்மந்தப்பட்ட தொழில்சாலையில் பணியாளர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் Ahmad Mukhlis Mukhtar உறுதிப்படுத்தினார். 

தொழில்சாலை 80% தீயில் எரிந்ததாகவும் நள்ளிரவு சுமார் 12 மணிக்கு மேல் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார். தீ மற்ற கூடாரங்களுக்குப் பரவும் முன்னதாகவே தீயைக் கட்டுப்படுத்தியதால் சேதம் அதிகம் ஏற்படவில்லை என சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார். தீ ஏற்பட்டதற்கான காரணத்தைத் தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *