அம்பாங் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ! காயங்களுடன் தப்பிய இருவர்!
- Sangeetha K Loganathan
- 14 Feb, 2025
பிப்ரவரி 14,
அம்பாங்கில் உள்ள Taman Seri Kayangan அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டிலிருந்த இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டதாக சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார். நண்பகல் 12.30 மணிக்குத் தீவிபத்து குறித்தான அவசர அழைப்புக் கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.
அடுக்குமாடிக் குடியிருப்பின் முதல் மடியில் உள்ள வீட்டில் தீ பரவியதாகவும் வீட்டில் இருந்த இருவரையும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மீட்டு தீயைக் கட்டுப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். 80% வீடு தீயில் எரிந்த நிலையில் பாதிக்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகச் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.
Sebuah unit di pangsapuri Taman Seri Kayangan Ampang terbakar tengah hari tadi. Dua penghuni mengalami kecederaan dan berjaya diselamatkan oleh pasukan bomba. Kebakaran memusnahkan 80% rumah dan mangsa kini dirawat di hospital.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



