தீ விபத்தில் 13 மோட்டார் சைக்கிள்கள் கருகின!

- Sangeetha K Loganathan
- 06 Mar, 2025
மார்ச் 6,
வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மோட்டார் சைக்கிள் பட்டறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 13 மோட்டார் சைக்கிள்கள் தீயில் கருகின. இன்று அதிகாலை 3.18 மணிக்குத் தீ விபத்து குறித்தான அவசர அழைப்பைப் பெற்றதாக Simpang Tiga Jeniang மாவட்டத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Johari Bar Azwar தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பட்டறை வணிக வளாகத்தின் அருகில் இருந்ததால் தீ வேகமாகப் பரவி பட்டறையில் இருந்த மோட்டார் சைக்கிள்கள் தீயில் கருகியதாகவும் பட்டறையில் இருந்த 8 சொகுசு மோட்டார் சைக்கிள்கள் உட்பட 13 மோட்டார் சைக்கிள்கள் தீயில் கருகியதாகவும் அவர் தெரிவித்தார். காலை 6 மணிக்குத் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தீ விபத்தில் எந்தவோர் உயிர்சேதமும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Dua premis perniagaan di Simpang Tiga Jeniang, Sik terbakar awal pagi tadi mengakibatkan 13 motosikal hangus serta kemusnahan sebuah kedai tayar dan peralatan lain. Tiada mangsa terlibat sementara punca kebakaran dan nilai kerugian masih disiasat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *