தீ விபத்தில் வீடும் 7 வாகனங்களும் கருகியது!

top-news

பிப்ரவரி 3,

நேற்று மாலை கிளாந்தான்  Hulu Besutபகுதியில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 மோட்டார் சைக்கிள்களும் 1 லாரி 1 கார் தீயில் முற்றிலும் எரிந்து கருகியது. மாலை 6.46 மணிக்குத் தீ விபத்து குறித்து அவசர அழைப்பைப் பெற்றதாகவும் சம்மந்தப்பட்ட 2 மாடி வீடு தீயில் முற்றாகக் கருகியதாகவும் JERTIH மாவட்டத் தீயணைப்பு மீட்பு ஆணைய இயக்குநர் Mustafa Ismail தெரிவித்தார்.

இத்தீ விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றாலும் 1 டன் லாரியும் 5 மோட்டார் சைக்கிள்களும் 1  Perodua Kancil காரும் முழுவதும் தீயில் கருகியதாக அவர் தெரிவித்தார். இரவு 9 மணிக்குத் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் தீ ஏற்பட்டதற்கானக் காரணத்தைத் தடயவியல் அதிகாரிகள் அய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

Sebuah rumah dan tujuh kenderaan, termasuk lima motosikal, musnah dalam kebakaran di Kampung Gong Duek, Hulu Besut. Tiada kemalangan jiwa dilaporkan. Punca kejadian masih disiasat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *