மாணவர் தங்கும் விடுதியில் தீ! உயிர் தப்பிய 101 மாணவர்கள்!
- THINAGAREN SANGGAREN
- 22 Jul, 2026
ஜூலை 22,
நேற்று அதிகாலை கூலிமில் உள்ள மாணவர் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் விடுதியில் இருந்த 101 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டநர். நேற்று அதிகாலை 2.47 மணிக்குத் தீ விபத்து குறித்து அவசர அழைப்பைப் பெற்றதும் கூலிம் Tarbiah Diniah பள்ளியில் அமைந்துள்ள மாணவர் தங்கும் விடுதிக்கு விரைந்ததாக கூலிம் மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி Abdul Mois Ahmad தெரிவித்தார்.
தீ வேகமாகப் பரவியதால் விடுதியில் தங்கியிருந்த அனைத்து மாணவர்களையும் உடனடியாக மீட்டதாக Abdul Mois Ahmad தெரிவித்தார். பள்ளியின் ஆண்கள் தங்கும் விடுதியின் 2 மாடிகளும் 65% தீயில் கருகியதாக Abdul Mois Ahmad தெரிவித்தார். இந்த தீ விபத்தில் எந்தவொரு உயிரிழப்பும் , காயங்களும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தீ ஏற்பட்டதற்கான காரணத்தை அறிய தொடர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் Abdul Mois Ahmad தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



